Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
பொதுமக்கள் செறிந்துவாழும் வவுணதீவுப் பிரதேசத்தில் பொலிஸாரினால் காட்டு மிருகங்கள் வேட்டையாடுவதை தடுக்குமாறு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கிழக்குமாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேரடியாக சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து இன்று வேண்டுகோள் விடுத்ததுடன் எழுத்து மூல மகஜரொன்றையும் அவர் கையளித்துள்ளார். அவர் சமர்ப்பித்துள்ள மகஜரில் தெரிவித்துள்ளதாவது,
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரவெட்டி கிராமத்தில் உள்ள பொது விளையாட்டு மைதானத்திற்கருகாமையில் வவுணதீவு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் காட்டுப்பன்றி வேட்டையாடிய போது 13வயதுடைய மட்.நாவற்காடு நாமகள் வித்தியாலய 9ஆம் ஆண்டு மாணவன் விஜயகுமார் படுகாயமடைந்து அவசர சிகிச்சை பெற்று வருகின்றான்.
இப்பகுதியில் அடிக்கடி வெடிச்சத்தம் கேட்பதாகவும் காட்டு மிருகங்கள் வேட்டையாடப்படுவது நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றார்.
இப்பகுதிபொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியாகும். குறித்த சூட்டுச்சம்பவமானது தற்செயலாக இடம்பெற்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றபோதும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் செறிந்து வாழும் இப்பகுதியில் காட்டு மிருகங்கள் பொலிசார் வேட்டையாடுவதை தடுக்குமாறும் கோரியுள்ளதுடன் அதன் பிரதியை அரசஅதிபருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago