2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

இராணுவ சீருடையில் வந்தவர்களால் இரு இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக புகார்

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு ஆயித்தியமலை மணிபுரம் கற்பானைக்குளத்ததைச் சேர்ந்த இருவர் இராணுவச் சீருடையில் வந்தவர்களால் விசாரணைக்கென வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்ளின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


இராணுவத்தினரின் ஜீப் வண்டி ஒன்றும் 3 மோட்டார் சைக்கிள்களிலும் சுமார் 10 பேர் வரை வந்ததாக வீட்டார் தெரிவிக்கின்றனர்.


தமது வீட்டிலிருந்த பேரின்பராசா தவசீலன் என்ற 20 வயதுடைய இளைஞனை வாகனத்தில் வந்த தம்மை இராணுவத்தினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளதாக அவருடைய தாயார் தெரிவித்தார்.


அதேவேளை பால் வியாபராம் செய்யும் தவசீலனின் சகோதரர் திருக்கேஸ்வரன் (வயது 38) வழியில் வைத்து வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.


இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாண சபை உறுப்பினர்களிடம் முறையிடப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--