Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு ஆயித்தியமலை மணிபுரம் கற்பானைக்குளத்ததைச் சேர்ந்த இருவர் கரடியனாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பேரின்பராசா தவசீலன் (20) அவரின் சகோதரர் திருக்கேஸ்வரன் (38) ஆகியோரே இவ்வாற தடுத்து வைக்கப்பட்டுள்தாகவும் இவர்கள் விடுதலைப்புலிகளின் புலனாய்புப் பரிவில் முன்பு இருந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் இராணுவச் சீருடையில் வந்தவர்களால் இவர்கள் விசாரணைக்கென வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக குடும்பததினர் தெரிவித்திருந்தனர்.
நேற்று மாலை வரை இவர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து எந்த விதமான தகவல்களையும் பொலிஸ் தரப்பிலிருந்து பெறமுடியாதிருந்தது.
இந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நேற்று இரவு 9.30 மணிக்கு பின்னரே பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago