Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வெளிமாவட்டங்களுக்குப் பயணம் செய்யும் போது அவர்களின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸார் ஆயுதங்களை அவ்வப்பகுதி பொலிஸ் நிலையங்களில் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸார் மாகாணசபை உறுப்பினர்கள் சகிதம் வெளியிடங்களுக்குச் செல்லும்போது பொலிஸ் நிலையத்தில் அறிவித்துவிட்டுச் செல்லும் நடைமுறை இருந்தது.
இது குறித்து மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் கூறுகையில், மாகாண சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாளை திருமலைக்கு செல்வது குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் அறிவித்துவிட்டு வருமாறு தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸாரை பணித்தபோது, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடமும் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரிடமும் தான் இது குறித்து கேட்டபோது தான் கேட்டபோது இது மேலிடத்து உத்தரவு என பதிலளிக்கப்பட்டதாகவும் இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மாகாண சபை உறுப்பினரான ஏ.சசிதரனும் இவ்வாறான அறிவித்தல் கிடைத்துள்ளதாக கூறினார்.
13 minute ago
47 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
47 minute ago
53 minute ago