2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகள்

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று சனிக்கிழமை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு உலர் உணவுப் பொதிகளையும் கையளித்தார்.

மகிழுர், மகிழுர்முனை பிரதேசத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை கையளிக்கும் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து முதலமைச்சர் களுதாவளைப் பிள்ளையார் ஆலயத்திலும் வழிபாடுகளில் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--