2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நவகிரி குளம் திறப்பு; பல பகுதிகள் நீரில்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 09 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்,ஜிப்ரான்)

வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வேற்றுச்சேனை கிராமத்திலுள்ள நவகிரி குளம் திறந்து விடப்பட்டுள்ளதால், பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளநீர் வீடுகளில் புகுந்துள்ளதால்  இம்மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையில், கூரைகளிலும் மரங்களிலும் வீட்டு வளைகளில் தடிகளை போட்டு பரவிக்கொண்டும் பொதுமக்கள்   பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இம்மக்களை மீட்டு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர் உதயசிறிக்கு தான் பணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உன்னிச்சைக்குளம் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரவெட்டி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சின்னத்தோட்டம் போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அங்குள்ள பொதுமக்களை மீட்பதற்கான நடவடிக்கையை கடற்படையினரின் உதவியுடன் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஷ் குணவர்த்தன மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு மீட்கும் பொதுமக்களை கரவெட்டி நடேஸ்வரா வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.  

இதேவேளை, வெல்லாவெளி மண்டூர் கூழாவடி பாலம் உடைவடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--