2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வெள்ளத்தால் மட்டு. – படுவான்கரைக்கான தரைவழிப்பாதை துண்டிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 09 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு – படுவான்கரைக்கான தரைவழிப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

பட்டிருப்பு பாலவீதி, வலையிறவு வீதி, செங்கலடி கறுத்தப் பாலவீதி ஆகியவற்றில் 5 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்வதாகவும் இதனால் படுகரை மக்கள் மட்டக்களப்புக்;கு வரமுடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

ஆணைகட்டியவெளி,  ராணமடு, காக்காச்சிவெட்டை, நாதன்வெளி, பலாச்சோலை, வேற்றுச்சேனை, புலால்தோட்டம் ஆகியன நீரில் மூழ்கியுள்ளன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் இயந்திரப் படகு மூலம் வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு வருவதுடன், மீட்பு பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஈடுபட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X