2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கபட்டோருக்கு கிழக்கு முதல்வரின் நிவாரணப் பொருட்கள்

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தினை  கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்டுவருகின்றார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல பிரதேசங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கப்படுகின்றன.

இன்று மட்டக்களப்பு மாவட்டதட்தின்; ஏறாவூர் பிரேதச செயாலளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை,பாலர்சேனை, வேப்பவெட்டுவான், காரைக்காடு போன்ற கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் வழங்கி வைத்தார்.

நேற்று கல்லடி மாதர் சங்க உறுப்பினர்களுக்கும் களுதாவளைப் பிரதேச மக்களுக்கும் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நாளை திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கும் வாகரைப் பிரதேசத்திற்கும் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X