2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்; வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையை கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம், வெள்ளத்தால் பாதிகப்பட்ட பல பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  இலுப்படிச்சேனை, பாலாசேனை, வேப்பவெட்டுவான், காரைக்காடு போன்ற கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் நேற்று வழங்கி வைத்தார். அத்துடன், கல்லடி மாதர் சங்க உறுப்பினர்களுக்கும் களுதாவளைப் பிரதேச மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இன்றையதினம் திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கும் வாகரைப் பிரதேசத்திற்கும் நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .