Super User / 2011 ஜனவரி 14 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித், எஸ். மாறன், கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள ஈரளக்குளம் மக்களுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை ஒரு தொகுதி உணவுப் பொருட்களை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஹெலிக்கப்டர் மூலம் கொண்டு சென்று வழங்கிவைத்தார்.
இதேவேளைஇ மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மகிழவட்டவான்இ கல்குடாஇ தில்லன் தோட்டம்இ சின்னத்தோட்டம்இ உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மட்டக்களப்ப எகெட் கரித்தாஸ் நிறுவனம் நேற்று வியாழக்கிழமை நிவாரண பொருட்களை வழங்கியது.
சுவிட்ஸர்லாந்தில இயங்கும் முனைப்பு சமூக அமைப்பும் கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச மக்களுக்கு மட்டக்களப்பு மனித உரிமை இல்லத்தினால் இன்று வெள்ளிக்கிழமை உலருணவு, பால்மா, தண்ணீர் போத்தல் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
.jpg)
2 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Dec 2025