2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

அமைச்சர் றிசாட் மட்டு. விஜயம்

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா, இர்சாத் ரஹ்மதுல்லா)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகள் எந்தவித பாகுபாடின்றி அரசாங்கத்தால் வழங்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சருடன் வன்னி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோரும் வருகை தந்நிருந்தனர்.

இதேவேளை, கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வந்த எட்டு நலன்புரி நிலையங்களில் ஆறு நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .