2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

விடுமுறை வழங்கப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை ஆரம்பம்

Super User   / 2011 ஜனவரி 16 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

வெள்ளம் காரணமாக கடந்த வாரம் விடுமுறை வழங்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.நிஸாம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

எனினும், வெள்ளம் தேங்கி நிற்கும் பாடசாலைகள் மற்றும் அகதி முகாம்களாக செயற்படும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்ப்பில் குறித்த வலய கல்வி பணிப்பாளர்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 302 பாடசாலைகள் பாதிக்கப்பட்டதுடன் 529 பாடசாலைகள் அகதி முகாம்களாக செயற்பட்டன என எம்.ரி.நிஸாம் கூறினார்.

அகதி முகாம்களாக செயற்பட்ட பல பாடசாலைகள் நீரிழ் மூழ்கியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--