Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2011 ஜனவரி 17 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மட்டக்களப்பிலிருந்து கெலும் பண்டார)
வெள்ள மட்டம் குறைந்து வரும் நிலையில் மட்டக்களப்பில் எஞ்சியுள்ள 62 நலன்புரி முகாம்களிலுள்ள மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பப்பட்டு, அம்முகாம்கள் மூடப்படும் என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது. அங்கு 96, 342 பேர் இடம்பெயர்ந்தனர். அவர்களில் 31,651 பேர் பாடசாலைகளிலும் வழிபாட்டுத் தலங்களிலும் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர். ஏனையோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருந்தனர்.
இடம்பெயர்ந்தோருக்காக 295 நலன்புரி முகாம்கள் அமைக்கப்பட்டதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கூறினார்.
'இம்முகாம்களை நாம் 62 ஆக குறைத்துள்ளோம். அவை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் மூடப்படும். மாவட்ட செயலாளருக்கு இது தொடர்பாக நான் அறிவுறுத்தல் விடுத்துள்ளேன். புதன்கிழமை அனைத்து மக்களும் வீடுகளில் இருப்பார்கள் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கூறினார்.
இதேவேளை, மட்டக்களப்பில் பாரிய சுத்திகரிப்பு வேலைகள் நேற்றும் தொடர்ந்தன. மாசடைந்த கிணற்றுநீரை வெளியேற்றுவதில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். பெரும்பாலான மக்கள் மின்சார மற்றம் சமையலறை சாதனங்களை இழந்துள்ளனர். அத்துடன் பால்மா, சமையல் பொருட்கள், படுக்கை விரிப்புகள், குடிநீர் போன்ற உதவிகளையும் மக்கள் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago