2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

நகை திருடிய இளைஞனுக்கு முதலாம் திகதிவரை விளக்க மறியல்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 20 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

ஊறணி காந்தி கிராமத்தில் அண்மையில தனது நண்பனின்; வீட்டில் 3 பவுண் நகையைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அதே இடத்தைச் சேர்ந்த இளைஞனை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  தனது நண்பனின் வீட்டுக்குச் சென்றிருந்த ப.ஜெயராஜ் (20 வயது) அலுமாரிக்குள் இருந்த 3 பவுண் நகையை திருடிச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞனில் சந்தேகப் பட்ட வீட்டார் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் அவ்விளைஞனை பின் தொடர்ந்த போது அவர் கையில் பணப்புளக்கம் இடம்பெற்றதனை அடுத்து கைது செய்து விசாரணை மேற் கொண்ட போது அவர் குறித்த நகையை கொள்ளையிட்டமையை ஒப்புக்கொண்டுள்ளார்.

கொள்ளையிட்ட நகையை மட்டக்களப்பு ஹற்றன் நசனல் வங்கியில் 70 ஆயிரம் ரூபாவிற்கு அடகு வைத்தது தெரிய வந்துள்ளது. நகையினை மீட்ட பொலிஸார் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் முதலாந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சிரேஸ்ர பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிதிதுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--