Super User / 2011 ஜனவரி 20 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.லோஹித்)
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி பொலிஸில் சரணடைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை சரணடைந்த பிரசாந்தனும் மற்றும் 5 பேரும் இன்று மட்டக்களப்பு நீதவான் என்.எம்.அப்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல பிரசாந்தனுக்கு நீதவான் அனுமதி வழங்கினார்.
ஏனைய 5 பேரையும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு அவர் உத்தரவு வழங்கினார்.
ஆரையம்பதி பிரதேச செயலாளரை அச்சுறுத்தியமை, கிராம சேவையாளர் சுரேஷை அச்சுறுத்தியமை, ஆரையம்பதி பிரதேச செயலக ஊழியர் பைரூஸை தாக்கியமை ஆகிய 3 குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது. சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி யூ.அப்துல் நஜீம் ஆஜராகியிருந்தார்.
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago