2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மட்டு. மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஐ.நா உதவும்:கதரீன்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 21 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், ரி. லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தின் பொருளாதாரம் அழிவடைந்துள்ளதுடன் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் ஐக்கிய நாடுகள் சபை உதவும் என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும், அவசர நிவாரண பிரதி ஒருங்கிணைப்பாளருமாகிய கதரீன் பிராக் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு புதன்கிழமை இலங்கையை வந்தடைந்த ஐ.நா.வின் உதவிச்செயலர், வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட இவர் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், 'பாதிக்கப்பட்ட பிரதேசத்தை கட்டியெழுப்ப ஐ.நா உதவும்' என குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--