2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

நிவாரணப் பொருட்களில் மோசடி; கூட்டுறவு சங்க முகாமையாளர் இடைநிறுத்தம்

Super User   / 2011 ஜனவரி 22 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் சலாம் யாசீம்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவரணப்  பொருட்களில் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளரை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண கூட்டுறவு மற்றும் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை தான் கொக்கட்டிச்சோலை பகுதிக்கு விஜயம் செய்தபோது அப்பகுதி மக்கள் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து குறித்த கூட்டுறவு சங்கத்தில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தான் பரிசோதித்த போது ஒவ்வொன்றிலும் 200 மற்றும் 300 கிராம் நிறை குறைந்ததை கண்டேன் என அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்தே குறித்த பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளரை வேலையிலிருந்து நிறுத்தியதாக அமைச்சர் சுபையிர் மேலும் கூறினார்.


  Comments - 0

  • sltj.blogspot.com Sunday, 23 January 2011 08:48 PM

    நிவாரணத்தில் தனது நிவாரணம் ?? இன்னும் எத்தனை வெளியே வர இருக்கிறதோ ??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--