Menaka Mookandi / 2011 ஜனவரி 23 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பிரதேசத்திலுள்ள குமாரவேலிக்கிராமம் சேனைக்குடியிருப்பு மற்றும் ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய கிராம மக்கள் தங்களுக்கு இதுவரை வெள்ள நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் புகார் செய்துள்ளார்கள்.
நேற்றுச் சனிக்கிழமை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரமுகர் பிரசன்னா இந்திரகுமார் சகிதம் நாடாளூமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தன்னாமுனை, மைலாம்பாவெளி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஏறாவூர், குமாரவேலியார் கிராமம் உட்பட 10இற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விஜயம் செய்து வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டதோடு வெள்ள நிவாரணங்கள் தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
குறிப்பாக ஆறுமுகத்தான் குடியிருப்பு, குமாரவேலியர் கிராமம், சேனைக்கடியிருப்பு ஆகிய கிராம மக்கள் வெள்ளம் வடிந்து தாம் வீடு திரும்பி ஒருவாரம் கடந்துவிட்ட போதிலும் இதுவரை பிரதேச செயலகம் ஊடாக அரச நிவாரண உதவிகளோ, அரசசார்பற்ற அமைப்புக்களின் உதவிகளோ தங்களுக்கு கிடைக்வில்லை என்றும்இ
உணவு நிவாரணம் மட்டுமல்ல கிணறுகளைச் சுத்தம் செய்ய குளோரின் பவுடர் கூட தங்களுக்கு வழங்கப்படவில்ல என்று சுட்டிக்காட்டி அரசாங்க அதிகாரிகள் மீது கடும் அதிருப்தி வெளியிட்டார்கள். இதனையடுத்து அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கமாறு கேட்டுக் கொண்டார்.
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலாளர் கே.சித்திரவேலை சந்தித்து இதுபற்றி கேட்டபோது, எதிர்வரும் திங்கட்கிழமை உலக தரிசனம் இயக்கம் (வேல்ட்விசன்) மூலம் ரூபா.2,500 பெறுமதியான நிவாரணப்பொருட்கள் ஆறுமுகத்தான் குடியிருப்பு மக்களுக்கும் சர்வோதயம் மூலம் குமாரவேலியார் மற்றும் சேனைக்குடியிருப்பு ஆகிய கிராம மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் பிரதேச செயலாளர் உறுதியளித்துள்ளார்.
.jpg)
11 minute ago
16 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
2 hours ago