Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 ஜனவரி 24 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
கடந்த வியாழக்கிழமை விளக்கமறியலில் வைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லா இவர்கள் ஐந்து பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனின் சகோதரர் கரன் என்பவர் எதிர்வரும 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரையம்பதி ஆர்.கே.எம். வித்;தியாலத்திலும் கடந்த திங்கட்கிழமை வெள்ள நிவாரனம் தொடர்பில் ஆரையம்பதி பிரதேச செயலக ஊழிர்கள் தாக்கப்பட்டதுடன் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கும் சேதம் ஏற்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் உட்பட ஏழு பேர் காத்தான்குடி பொலிஸாரினால் தேடப்பட்டுவந்தனர்.
இந்நிலையில் இவர்கள் கடந்த வியாழக்கிழமையன்று சரணடைந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனுக்கு பிணை வழங்கப்பட்ட போதும் ஏனைய ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்களில் கிழக்க மாகாண சபை உறுப்பிர் பிரசாந்தனின் சகோதரர் கரனை தவிர ஏனைய ஐவரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .