2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பரீட்சை முடிவுகள் வெளியிடப்படாததை கண்டித்து கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 26 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பரீட்சை எழுதியும் இதுவரையில் முடிவுகள் வெளியிடப்படாததை கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கலை, கலாசார பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள், அதன் பீடாதிபதி ஆகியோர் தங்கியிருந்த கட்டடத்தின் நுழைவாயிற் கதவுகளை பூட்டிவைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது பரீட்சை முடிவுகள் வெளியாகுவதற்கான  நடவடிக்கை எதனையும் இதுவரையில்; நிர்வாகம் எடுக்கவில்லையென தெரிவித்த மாணவர்கள், பல தடவைகள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் கூறினர்.

இந்நிலையில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினரை ஒன்றுகூட்டி கலந்துரையாடினார். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
கலை, கலாசார பீடாதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதுடன், பரீட்சை முடிவுகளை கூடிய விரைவில்  வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--