Menaka Mookandi / 2011 ஜனவரி 26 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சியல்ல. மாறாக அரசாங்கத்தின் பங்காளிகள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டம் இன்று நேற்று மாலை காத்தான்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'உள்ளுராட்சிமன்ற தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிகவும் திறமையானவர்கள் மட்டுமல்ல கறை படியாத கரங்களாகவுமுள்ளனர்.
தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை மற்றும் அதன் செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் என்பவற்றை மாத்திரம் சொல்ல வேண்டுமே தவிர ஏனைய கட்சி வேட்பாளர்களை தூற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
எமது கட்சி, சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் அரசுடன் இணைந்தும் போட்டியிடுகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கணிசமான வெற்றிகளை இத்தேர்தலிலும் ஈட்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

1 hours ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
23 Nov 2025
23 Nov 2025