2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கிழக்கிலங்கையின் புகழ்பூத்த தமிழறிஞர் பண்டிதர் சீ.தம்பிப்பிள்ளை காலமானார்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற மூத்த தமிழறிஞரும் எழுத்தாளரும் பிரபல இலக்கியவாதியுமான தமிழ் ஒளி பண்டிதர் சீ.தம்பிப்பிள்ளை நேற்று திங்கட்கிழமை காலமானார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்குட்பட்ட பெரியகல்லாறை சேர்ந்த இவர் இறக்கும்போது வயது 87ஆகும்.
கிழக்கிலங்கையில் தமிழ் இலக்கியத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த தமிழ் ஒளி பண்டிதர் சீ.தம்பிப்பிள்ளை, காலவோட்டத்திலும் அதன்வருடி செல்லாமல் இலக்கியங்களை படைத்து வந்த ஒரு படைப்பாளி என அனைவராலும் புகழப்பெற்றவர்.


கிழக்கு மாகாணத்தில் இன்றும் ஒளிவீசி பிரகாசித்து வரும் புகழ்பூத்த தமிழ் பேரறிஞர்கள் வரிசையில் தனக்கென தனியிடம் கொண்டவர் தமிழ் ஒளி பண்டிதர் சீ.தம்பிப்பிள்ளை அவர்கள். அத்துடன் இளைஞர்கள் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுகாட்டவேண்டும் என பேரவாக்கொண்டு கல்லாற்றில் தமிழ்ச்சங்கம் தாபித்து அதனை வழிநடத்தி வந்தார்.

இந்து சமயம் மீது அலாதிப்பிரியம் கொண்ட இவர் இப்பகுதிகளின் அனேகமான ஆலயங்களுக்கு திருப்பொன்னூஞ்சல் மற்றும் ஆலய வரலாறுகளை தொகுப்பதில் பெரும் தனது பணியை மேற்கொண்டிருந்தார். இதுவரையில் 10க்கும் மேற்பட்ட இலக்கிய இரசனைகளை கொண்ட புத்தகங்களை வெளியிட்டுள்ள அவர் தள்ளாத வயதிலும் புத்தகங்களை எழுதிவந்துள்ளதுடன் அவை இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.

அன்னாரின் மறைவு தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும் என்பதுடன் அன்னாரின் நல்லுடல் பெரியகல்லாறு பிரதான வீதியில் இருக்கும் அவரின் வீட்டில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பெரியகல்லாறு இந்துமயானத்தில் நல்லடக்கம்செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--