2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் வந்த முதலையால் அச்சம்

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அணுருத்தன்)

மட்டக்களப்பு கருணைபுரம் வாழைச்சேனையில் உள்ள தாமரைக் குளத்திற்கு வெள்ளத்தினால் வந்த முதலை ஒன்றினால் பிரதேச மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இம் முதலை சுமார் 8 அடி நீளமுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதனைக் கண்ட பிரதேச மக்கள் அதனை வெளியேற்றி தருமாறு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இரவு வேளைகளில் இம் முதலை வீதியில் உணவிற்காக அலைந்து திரிவதனால் இதனை கண்ணுற்று அதிர்ச்சியடைந்த சிலரும் உண்டு.

இரவு நேரத்தில் அதனை அண்டிய வீதியில் செல்வதற்கு மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--