2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹைராத் வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தடம் புரண்டதில் ஒருவர் காயப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி வந்த முச்சக்கர வண்டி- ஹைறாத் வீதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் முச்சங்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதன் சாரதி காயப்பட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் பயணித்த மற்றுமொருவர் எந்தக் காயமுமின்றி தப்பியுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--