Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு மட்டக்களப்புடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையிலுள்ள போரதீவுபற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னவத்தை பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான பூ.பிரசாந்தன் வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான போக்குவரத்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள சின்னவத்தை பிரதேசத்துக்கான விநியோக நடவடிக்கைகள் யாவும் அம்பாறை ஊடாகவே இடம்பெற்றுவருகின்றன.
இப்பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 336 சிங்கள, தமிழ் குடும்பங்களுக்கு கிழக்கு மாகாணசபை மூலம் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த பூ.பிரசாந்தன்,
எமது சமூகம் ஏனையவர்களில்; தங்கி வாழும் நிலையில் இருப்பதன் காரணமாகவே இன்றும் எமது சமூகம் இருக்கின்ற இடங்களை விட்டு ஓடுவதுடன், இருப்பதற்கு இடமில்லாமல் அலைவதுமாக பாரிய கஷ்;டங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமையே எமது மக்களுக்கு உள்ளதாகவும் இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்றார். இந்த நிகழ்வில் போரதீவுபற்று பிரதேசசபையின் தவிசாளர் சிறி உட்பட மாகாணசபை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .