2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

யானைகட்டியவெளி பகுதிக்கு மின் விநியோகத்திட்டம் அங்குராப்பணம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுபற்று பிரதேச செயலகத்தக்குட்பட்ட யானைகட்டியவெளி பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை மின்சார விநியோக நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மஹிந்த சிந்தனையின் கீழ் 'முழு இலங்கைக்குமான மின்சாரம்'திட்டத்துக்கு அமைய சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா பெறுமதியில் இந்த மின்சார விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கு அமைய படுவான்கரைப் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் மின்சார விநியோக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய யானைகட்டியவெளி மக்களின் நீண்டகால குறையாகவுள்ள இந்த மின்சார பாவனை அவர்களுக்கு கிடைத்து. இன்று காலை யானைகட்டியவெளி பிள்ளையார் ஆலயத்துக்கும் முன்பாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மின்சார விநியோகத்திட்டம் மீள்குடியேற்ற பிரதியமைச்சரால் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் நினைவுக்ல்லும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உதயசிறிதர், மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன்,அமைச்சின் பணிப்பாளர் சத்தியவரதன்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச அமைப்பாளர் சித்திரவேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--