Super User / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித், எம்.சுக்ரி)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று சனிக்கிழமை பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரால் வழங்கப்பட்டன.
வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விடுக்கப்பட்ட வேண்டுகொளுக்கிணங்க சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவால் இந்த அபிவிருத்தி குழு நியமிக்கப்பட்டுள்ளது.
3 வருட காலத்திற்கு செயற்படவுள்ள இந்து அபிவிருத்தி குழு நிருவாகம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி, மேம்பாடு, எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சார்ந்தும் செயற்படவுள்ளது.
இக்குழுவில், மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர்களான பொன் ரவீந்திரன், ருத்திரமலர் ஞானபாஸ்கரன் உட்பட 26 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


.jpg)
33 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
9 hours ago