2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பாடசாலையில் கொள்ளையிடப்பட்ட கணணிகள் பொலிஸாரால் மீட்பு

Super User   / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.ஸ்.வதனகுமார்)

கடந்த சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு, கொத்தியாபுலை கலைமகள் மகா வித்தியாலயத்தின் கணணிக் கூடத்தை உடைத்து கொள்ளையிடப்பட்ட கணணிகள் மற்றும் உபகரணங்களை வவுணதீவுப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதுடன் கொள்ளையிட்டவரையும் கைது செய்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஸ் குமாரசிங்க தலைமையில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியும் மக்கள் தொடர்பதிகாரியுமான எம்.ஐ.உவைஸ் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து குறித்த கணணி உபகரணங்கள் ஆரையம்பதியில் வைத்து பொலிஸாரினால் மீட்கபடப்ட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--