2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

எகிப்து ஜனாதிபதியை விரட்டியது போல் எமது அரசாங்கத்தை விரட்டும் காலம் நெருங்கிவிட்டது: சோமவன்ஸ

Super User   / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

எகிப்து ஜனாதிபதி முபாரக்கை மக்கள் விரட்டி அடித்தது போல் இலங்கை அரசாங்கத்தை விரட்டியடிக்கும் காலம் நெருங்கிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.இப்றாகீம் தலைமையில் காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய சோமவன்ஸ அமரசிங்கஇ

"எகிப்தில் நடந்தது போல இலங்கையிலும் மிக விரைவில் நடக்கும்.  மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக எவரும் கூறமுடியாது.

மக்கள் விடுதலை முன்னணியிடம் இந்த நாட்டின் ஆட்சி பொறுப்பை வழங்கினால் நேர்மையாகவும் நீதியாகவும் செய்து காட்டுவோம்.

இந்த ஆட்சியை மாற்றி நேர்மையான அரசை கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--