Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி,ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு நகரில் 7.5கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிட நிலையமும் நவீன கடைத்தொகுதியும் இன்று ஞாயிற்றுக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முயற்சியால் வடக்கு, கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி திட்டத்தின் நெக்டப் எனப்படும் திட்டத்தின் கீழ் இந்த பஸ் தரிப்பிட நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர், மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீத்தா பிரபாகரன் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த பஸ் தரிப்பிட நிலையத்துடன் 27 கடைகளைக் கொண்ட நவீன கடைத்தொகுதியும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
35 minute ago
1 hours ago