Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாமல் புறக்கனிக்கப்பட்டதானது தமக்கு வேதனையளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அதிக படியான வாக்குகளை பெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குறைகளை ஆராயும் கூட்டத்திற்கு நாங்கள் அழைக்கப்படாதது எங்களுக்கு வேதனையளிக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி போன்ற விடயங்களை ஆராய்ந்த இன்றைய கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் அழைக்கப்படாதது புதிராகவே எமக்குள்ளது என்றார் அவர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் புரிந்துனர்வுடன் செயற்படும் அதே நேரம் பேச்சு வார்த்தைகளையும் நடாத்திவருகின்றது. இந்நிலையில் எம்மை புறக்கனிப்பதானது எமக்கு கவலையளிக்கின்றது என பொன் செல்வராசா தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்திற்கு அழைக்கப்படாதது குறித்து நாம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரான பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியேரிடத்தில் வினவிய போது அவர்கள் எமக்கு அளித்த பதில் திருப்தியானதாக இருக்கவில்லை.
இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இன்றை கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையின் மட்டக்களப்பு மாவட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago