2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க. எத்தேர்தல்களிலும் கூட்டுச்சேராது: பிரதி தலைவர் கருஜயசூரிய

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தேர்தல் உட்பட இனிவரும் எந்த தேர்தல்களிலும் எவருடனும் கூட்டுச்சேர்ந்து போட்டியிடாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற  உறுப்பினருமான கருஜயசூரிய தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாணசபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சசிதரனின் இல்லத்தில் மேற்படி வேட்பாளாகளுக்கான கூட்டம் நடைபெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உட்பட இனிவரும் எந்த தேர்தலிலும் தனித்தே போட்டியிடும்.
இந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் நாடு பூராகவும் 5,100 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். நாளாந்தம் ஐக்கிய தேசியக் கட்சியில் மக்கள் இணைந்து கொண்டே உள்ளனர். ஆட்சி மாற்றத்தை நோக்கிய பயணத்தில் மக்கள் எம்முடன் இணைந்து கொண்டே உள்ளனர்.

நாட்டின் நாலாபுறங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைக் காரியாலயங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்த மக்கள்  ஐக்கிய தேசியக் கட்சியை நேசிக்க தொடங்கியுள்ளனர். யுத்த காலத்திலில்லாத விலையேற்றம் இன்று யுத்தமில்லாத காலத்தில் ஏற்பட்டுள்ளது. இன்று தேங்காயொன்றின் விலை 75 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோ 120 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.

யுத்த மில்லாத இன்றைய காலகட்டத்தில் ஏன் அரசாங்கம் இவ்வாறான விலையேற்றத்தை மேற்கொள்கின்றது. இதனாலேயே மக்கள் இன்று அரசின் மீது வெறுப்படைந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை வளர்த்தெடுக்க அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .