2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இந்து இளைஞர்மன்ற பரிசளிப்பு விழா

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றம் நடத்திய மகாசிவராத்திரி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

பெரியகல்லாறு இந்து இளைஞர்மன்ற தலைவர் வ.ஜனார்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில,; மட்டக்களப்பு இந்துக் கலாசார உத்தியோகத்தர் திருமதி எஸ்.சிவலிங்கம் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கல்வித்துறைக்கு அளப்பரிய சேவையாற்றியவர்கள்,  இந்துமத வளர்ச்சிக்கு பணியாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்,  இந்து இளைஞர்மன்ற அறநெறி பாடசாலையில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் மகாசிவராத்திரியை ஒட்டி விசேட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--