Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 05 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
அலிசாஹிர் மௌலானவை அடுத்த கிழக்கு மாகாண அமைச்சராக்க ஆசைப்பட்டிருந்தேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஏறாவூரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அடுத்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அலிசாஹிர் மௌலானவை வேட்பாளராக நிறுத்தாமல் அவரை ஏறாவூர் நகர சபையுடன் மட்டுப்படுத்தி முடக்கிவிடும் தந்திரத்தை மேற்கொண்டு அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கான சதியினை அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி ஆகியோர் செய்துள்ளனர்.
அலிசாஹிர் மௌலானாவின் முகத்தை காட்டி வாக்குகளை பெற்றுக்கொண்டு அவரை ஓரம் கட்டுவதற்கான முயற்சியிலேயே இந்த தேர்தலை ஏறாவூரில் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
அலிசாஹிர் மௌலானா இந்த தேர்தலில் ஒதுங்குமாறும் அல்லது அமைதியாகுமாறும் நான் அவரை கேட்கின்றேன்.
அடுத்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அலிசாஹிர் மௌலானாவை வேட்பாளராக நிறுத்தி அவரை வெற்றியடைய செய்து மாகாண அமைச்சராக ஆக்குவதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றார்.
2 hours ago
2 hours ago
Sitheek Sunday, 06 March 2011 05:29 AM
நீங்க போனஸ் ஆசனம் ! எப்படி அப்பா முடியும் ?
Reply : 0 0
xlntgson Sunday, 06 March 2011 07:47 PM
கையில் இருக்கும் புறாவை விட மரத்தில், கூட்டில் இருக்கும் புறாக்கள் அதிகம் அல்ல!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago