2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

புதிய வாக்காளர் பதிவு சம்பந்தமாக விளக்கமளிக்கும் பயிற்சி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 08 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜவீந்திரா)

வாக்கு மக்களின் உரிமை. அதனைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு கிராம சேவகர்களுக்கு உண்டு. அது தொடர்பாக சகலருக்கும் விளக்கமளிக்க வேண்டும். மக்களின் வாக்களிக்கும் உரிமையை கிராம சேவகர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் ஜீ.நவரூப ரஞ்சினி தெரிவித்தார்.  

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அலுவலக உத்தியோகத்தர்களுக்கு புதிய வாக்காளர் பதிவு சம்பந்தமாக விளக்கமளிக்கும் பயிற்சி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர்  இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

புதிய வாக்காளர் பதிவை கிராம அலுவலர்கள் சரியான முறையிலும் கவனமாகவும் செய்யவேண்டும். வாக்களிக்கும் வேளையில் தங்களுக்கு வாக்குச்சீட்டுக் கிடைக்கவில்லை என்று மக்கள் அக்கறை காட்டுகிறார்கள். இது காலங்கடந்தது. 18 வயதைப் பூர்த்தி செய்த எல்லோரும் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். இது விடயமாக  பிரஜைகள் அனைவரும்  கிராம அலுவலர்களுக்குத் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றார்.

இவ்வாண்டிற்கான புதிய வாக்காளர் பதிவு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்து நடைபெறவுள்ளது.  தேர்தல் தலைமைக் காரியாலய உள்ளூராட்சி சபைகள் பிரிவின் உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. பி. குகநாதன், கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு  புதிய வாக்காளர் பதிவு சம்பந்தமான பயிற்சிகளை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X