Menaka Mookandi / 2011 ஜூன் 10 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, ஏறாவூர், தளவாய், மதுரங்காட்டுப் பகுதியிலிலிருந்து ஆணொருவரின் எலும்புக்கூட்டின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு விறகு எடுக்கச் சென்றவர்கள் மேற்படி எலும்புக்கூட்டினைக் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே அவை மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு ஏறாவூர், தளவாய் பகுதியைச் சேர்ந்த தியாகராசா சந்திரமோகன் (வயது 29) என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் கடைசியாக அணிந்திருந்த கறுப்பு நிற ரீ சேட்டினை வைத்தே அவரது சிறிய தாயாரினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெள்ளம் காரணமாக மேற்படி நபர் காணாமல் போன நிலையில் இது தொடர்பில் அதற்கு மறுதினம் ஏறாவூர் பொலிஸில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வீ.எம்.ஸியான் நேரில் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.



8 minute ago
36 minute ago
46 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
36 minute ago
46 minute ago
47 minute ago