Kogilavani / 2011 ஜூன் 10 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜாவிந்திரா)
இன்று ஒவ்வொரு இரண்டு வினாடிகளுக்கும்; உலகில் ஒருவருக்கு அவசரமாக குருதி தேவைப்படுகின்றது. அப்படியான ஒரு தேவையிருக்கும் போது ஓரிருவர் முயற்சி செய்வதனால் இத் தேவையை நிறைவு செய்ய முடியாது. இத் தேவையை நிறைவு செய்வதற்கு மக்களது பங்களிப்பு அவசியம். மக்களது பங்களிப்பை பெறவேண்டுமாகவிருந்தால் அவர்கள் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வைப் பெற வேண்டும் என செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு இரத்த வங்கி கையளிக்கும் வைபவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
விழிப்புணர்வை மக்கள் பெறுவதற்கான சாத்தியமான திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும். அதிகமான மக்கள் குருதி நன்கொடையாளர்களாக மாறுதல் வேண்டும். அவர்கள் நன் கொடை செய்வதற்கு தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்படல் வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நன்கொடையாளர்கள் ஞாபகமூட்டப்படல் வேண்டும். அப்போது இரத்த சேகரிப்பு விடயத்தில் வெற்றி பெற முடியும் என்றார்
இந் நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கிறேஸ், இரத்த வங்கி வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி. எஸ்.யாழினி, டாக்டர் திருமதி. கஸ்தூரி, டாக்டர் திருமதி எஸ். கலாவதி, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
8 minute ago
9 minute ago
21 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
21 minute ago
24 minute ago