2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 18 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சித்தாண்டி மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக, தென்கிழக்கு லண்டன் தமிழர் நலன்புரி ஒன்றியத்தினால் 250 மாணவர்களுக்கு   இப்பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

பாடசாலை உப அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும்  இந்நிகழ்வில் பேரவையின் நிர்வாக பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .