Menaka Mookandi / 2011 ஜூன் 19 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வேலைத்திட்டமொன்றை இலங்கை சமாதான நீதவான்களின் மனித உரிமைகள் அமைப்பு மாவட்டம் தோறும் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நடவடிக்கையின் கீழ் மேற்படி அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் கூட்டம் இன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை சமாதன நீதவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஜயந்த களுபோவில தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமாதான நீதவான்கள் மற்றும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள்; கலந்து கொண்டனர்.
இதன்போது தருஸ்மன் அறிக்கையை கண்டிக்கும் தீர்மானம் இவ்வமைப்பினால் எடுக்கப்பட்டதுடன் அமைப்பின் மாவட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

9 minute ago
23 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
3 hours ago
4 hours ago