2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்களின் இடமாற்றத்தைக் கண்டித்து மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றத்தைக் கண்டித்து 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு வலயத்தொகுதி அமைப்பாளர் எம்.சித்திரவேல் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கிடையில் ஆசிரியர்களின் இடமாற்றத்தை கண்டித்து தற்போது இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்  ஏ.எம்.ஈ.போல்,  மாகாண கல்விப் பணிப்பாளர் நிசாமுடன் தற்போது தொடர்புகொண்டு பேசியபோது, இதற்கான முடிவு பின்னர்  தெரிவிப்பதாக கூறினார்.

இருப்பினும் தங்களுக்கு தீர்க்கமானதொரு தீர்வு தற்போது கிடைக்கும் வரை தமது ஆர்ப்பாட்டம் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மாகாண கல்விப் பணிப்பாளர் நிசாம் பாடசாலைகளை இயங்க விடாமல் தடுத்தமை என்று தலைப்பிடப்பட்ட சுற்றுநிரூபமொன்றை சற்றுமுன்னர்    சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்  ஏ.எம்.ஈ.போல் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .