Menaka Mookandi / 2011 ஜூன் 22 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
கிரான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கழுவாமடு – காரையடிப்பட்டி அணைக்கட்டு பிரதேச விவசாயிகளினால் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மேற்படி அணைக்கட்டு உடைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்ததால் வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளத்தால் உடைக்கப்பட்ட 1.5 கிலோ மீற்றர் அணைக்கட்டை கட்டும் வேலையை ஆரம்பித்துள்ளனர். இந்த வேலைகள் பூரணப்படுத்தப்பட்ட பின்னர் மாதுறுஓயாவில் இருந்து திறக்கப்படும் நீர் வாகனேரிக் குளத்திற்கு நேரடியாக வரும் என்றும் இதனால் பத்தாயிரம் ஏக்கர் நெற் செய்கைக்கு நீர் கிடைக்கும் என்றும் கட்டு உடைக்கப்பட்டுள்ளதால் வாகனேரிக் குளத்திற்கு வரும் நீர் உடைவின் வழியாக ஆற்றிற்குச் சென்று விடுவதாக கல்குடா ஸ்ரீ லங்கா விவசாயிகள் சம்மேளனத் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
2 minute ago
10 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
14 minute ago