Super User / 2011 ஜூன் 24 , மு.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
8 பேர் கொண்ட மாணவர்கள் குழுவொன்று நேற்று மாலை கடலில் குளிக்கச் சென்றபோது அவர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயினர். இன்று வெள்ளிக்கிழமை காலை அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பாடசாலையொன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்றுவந்த தங்கத்துரை திஷாந்தன் (15) புஷ்பானந்தன் வினோதராஜ் (15) ஆகியேரே உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .