Suganthini Ratnam / 2011 ஜூலை 16 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
காத்தான்குடி நகரசபை பிரிவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்பட்டு வரும் மடுவம் தொடர்பிலான தீர்வுத்திட்டமொன்றினை காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் முன்வைத்துள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் விஞ்ஞான பூர்வமாக இவர்களால் தயாரிக்கப்பட்ட திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான சுருக்க பிரதிகளை காத்தான்குடியிலுள்ள பொதுநிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிகளிடம் கையளிக்கும் நிகழ்வும் மக்கள் சந்திப்பும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான், ஏ.ஜி.எம்.ஹாறூன் உட்பட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன்போது முக்கியஸ்த்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இத்திட்டத்தின் வரைபு வழங்கப்பட்டது.
.jpg)
12 minute ago
40 minute ago
50 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
40 minute ago
50 minute ago
51 minute ago