2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கிராம ஆயுதக் குழுக்களுக்கு உத்தரவு

Super User   / 2011 ஜூலை 17 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டுமென இராணுவம் இன்றுமுதல் கிராம மட்டத்தில் அறிவித்தல் விடுக்கவுள்ளதாக அப்பிரதேச இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாணத்தில், கொள்ளை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் சில குழுக்கள் சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

'கடந்த சில வாரங்களில் நாம் பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம்;. இன்று முதல் கிராம மட்டத்தில் பகிரங்க அறிவித்தல்களை விடுக்கவுள்ளோம். சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் குறித்து பெறுமதியான தகவல்களை தருபவர்களுக்கு நாம் அன்பளிப்புகளையும் வழங்கவுள்ளோம்' என மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்பகுதியில் பயங்கரவாத குழுக்கள் இல்லை. ஆனால் சில குழுக்கள்  கொள்ளைகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆயுதங்களை வைத்திருக்கின்றன' என அவ்வட்டாரங்கள் கூறின.

'அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை இதற்கு உதாரணமாகும். பல குழுக்கள் ரி-56, ரிவோல்வர்கள் போன்றவற்றை வை;திருக்கின்றன. சிலவேளை அவர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் தாமாக ஆயுதங்களை ஒப்படைத்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக இராணுவத்தினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
 


  Comments - 0

  • hari Monday, 18 July 2011 12:39 PM

    கிராம மட்ட கொலைகள் தெற்கில் நடக்கவில்லையா? படையில் இருந்து சென்றவர்களிடம் ஆயுதம் இல்லையா? இவைகளை யார் எப்போது பறிப்பது? ஏன் கிழக்கு மக்களை கொலையாளிகள் ஆயுததாரிகள் என்று இன்னும் கூறுகிறீர்கள்? ஒரு நாளைக்கு எத்தனை கொலை தெற்கில் நடக்கிறது தெரியாதா? என்ன நீதி என்ன நியாயம் இந்த நாட்டில்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--