2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இந்து குருமாருக்கான இருநாள் பயிற்சி செயலமர்வு

Kogilavani   / 2011 ஜூலை 18 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)
நாடளாவிய ரீதியில் இந்து குருமார்களுக்கான இருநாள் வதிவிடப் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.

இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார திணக்களத்துடன் இணைந்து ஏற்பாடு  செய்துள்ள இப்பயிற்சி செயலமர்வில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 60 இந்து குருக்கள் பங்குப்பற்றுகின்றனர்.

மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கே.ஞானமயாநந்தா தலைமையில் ஆரம்பமான இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இச்செயலமர்வில், இந்திய நாட்டிலிருந்து வருகைதந்துள்ள இசைமணி டி.ஜீவநாதன் மற்றும் பட்ஸி சிவராஜன் ஆகியோர் விரிவுரைகளை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .