Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 18 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை - தரம் 111ற்கு இன விகிதாசார அடிப்படையில் ஆட்களை திரட்டுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தனது எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவித்துள்ளார்.
குறித்த சேவைக்கு ஆட்களை திரட்டுவது தொடர்பாக மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்கான அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கூடுதலான புள்ளிகளைப் பெற்றவர்கள் அரச, நிர்வாக சுற்றரிக்கை 15இன் கீழ் 90இன்படி அதாவது இன விகிதாசார அடிப்படையிலேயே இந்த சேவைக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என ஆணைக்குழுவின் செயலாளரினால் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் குறித்த அரச நிர்வாக சுற்றிக்கை ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின் பேரில் பல வருடங்களுக்கு முன்னர் இரத்து செய்யப்டப்டுள்ளதாக இங்கு கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, இதன் பின்னர் தான் அறிந்தவரை இன விகிதாசார அடிப்படையில் நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசினால் இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட் திரட்டல் இடம்பெற்ற போது திறமை அடிப்படையிலேயே சுமார் 250பேர் தெரிவானார்கள். இதில் தமிழ் பேசும் எவரும் தெரிவாகவில்லை.
இன விகிதாசார அடிப்படை பேணப்படப்டிருந்தால் 40 - 50 வரை தமிழ் பேசும் இனத்தவர்கள் தெரிவாக வாய்ப்பு கிட்டியிருக்கும் என்பதை சுட்டிக் காட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, எம்.பி, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளருக்கு தான் அனுப்பி வைத்துள்ள ஆட்சேபனைக் கடிதத்தில் திறமை அடிப்படையில் ஆட்தெரிவு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது கடிதத்திற்கு பதில் கிடைக்காது விட்டால் அல்லது சாதகமான முடிவு கிடைக்காது விட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
32 minute ago
37 minute ago
38 minute ago