2021 மே 18, செவ்வாய்க்கிழமை

நோன்புப்பெருநாள் ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  நோன்புப்பெருநாள் ஒன்றுகூடலொன்று சம்மேளனக் காரியாலய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இவ்வொன்றுகூடலில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அபேகுணவர்த்தன, 23ஆவது  பிரிவின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் இராணுவ பிரிகேடியர் மஹிந்த முதலிகே, இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், முக்கியஸ்த்தர்கள், அதிகாரிகள், பள்ளிவாசல் சம்மேளன முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் வருடாந்தம் நோன்புப்பெருநாள் ஒன்றுகூடலை நடத்திவருகின்றது.


  Comments - 0

  • majeed Tuesday, 13 September 2011 06:12 PM

    இவ்வாறான நிகழ்விற்கு இன்னும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு ஏற்பாட்டாளர்கள் முயற்சிக்கவேண்டும். இது வெறுமனே பாதுகாப்பு படைக்ககாக நடத்தப்பட்டது போலிருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .