Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
ஏறாவூர் பிரதேசத்தில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
ஏறாவூர் பிரதான வீதியிக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் சென்ற குழுவினர் மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன் பாவனைக்குதவாத டயர்கள் மற்றும் பொருட்களை எரித்தனர்.
இதேவேளை, டெங்கு பெருகும் இடங்களை அடையாடளம் கண்டதுடன் அதற்கு பொருப்பான அவ் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் இத் திட்டத்தில் சுகாதார திணைக்களத்துடன் பொலிஸார், கிராம சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago