Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு பாசிக்குடா 'மாலுமாலு' ஹோட்டலில் இடம்பெற்றது.
நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் மேற்படி ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி பயிற்சிநெறியானது எமது நாட்டில் துரிதமாக வளர்ச்சி பெற்றுவருகின்ற அதிக வருமானங்களை ஈட்டக் கூடிய உல்லாச பயணத்துறையில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு மேற்படி பயிற்சிநெறி தேர்வுசெய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து சுமார் 50 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு நான்கு மாதகால பயிற்சிநெறி வழங்கப்படும். இதில் ஒருமாத காலம் வகுப்பறை பயிற்சிநெறியும், மூன்றுமாதகாலம் வெளிக்கள பயிற்சி நெறியுமாக மொத்தமாக நான்கு மாத காலப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி நிறைவு பெற்றதன் பின்னர் தேசிய கல்வியியல் தொழில்பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். ஒரு பயிற்சியாளருக்கு ரூபாய் 70,000 செலவு செய்யப்படும்.
இந்நிகழ்வில் கோரளைப்பற்று மத்தி ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஹமீட், பிரதித் தவிசாளர் லெவ்வே ஹாஜி, சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர் தௌபீக் மற்றும் அமைச்சின் உத்தியோகஸ்த்தர்கள், பயனாளிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
53 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago