Kogilavani / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
காத்தான்குடி நகர சபை பிரிவில் ஆறு கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட கழிவு நீர் அகற்றல் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ சுகாதார திட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமான யு.என்.டி.பி.யினால் கொக்கா கோலா நிறுவனத்தின் நிதியுதவியுடன் காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஆற்றங்கரையை அண்டியுள்ள பகுதியில் இக்கழிவு நீர் அகற்றல் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்ளஸ் கே, கொக்கா கோலா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான முகாமையாளர் அவிசேக் ஜுக்றான், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஷஸபர், உட்பட நகர சபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அதிகாரிகள் கொகா கோலா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் பலரும்; கலந்து கொண்டனர்.
இப்பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இப்பிரதேசத்திலுள்ள 350 குடும்பங்கள் நன்மையடவுள்ளன.
.jpg)
.jpg)
.jpg)
9 minute ago
14 minute ago
30 minute ago
56 minute ago
Mohamed shukri Saturday, 24 September 2011 10:02 PM
மாஷா அல்லாஹ' நல்ல முயற்சி . வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
30 minute ago
56 minute ago